முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
Mon, Feb 8, 2010, 12:41pm SLT
எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி - ஜனாதிபதி.

ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் தெரிவித்தார். ரஷ்யாவின் நட்புறவு (லுமும்பா) பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்ததையடுத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:- "இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முழு உலகிலும் கொடூரமான புலிகள் பயங்கரவாத சவால் மக்களின் அமைதி, சௌபாக்கியம் மட்டுமன்றி உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் பயங்கர வாதிகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே நாம் யுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பணயக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்திருந்த பொது மக்களை பாதுகாக்க நாம் மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினோம். இதனையடுத்து நான் மக்கள் ஆணையை மீண்டும் கேட்டேன். நியாயமான அமைதியான தேர்தல் மூலம் சில தினங்களுக்கு முன் தெரிவாகிய நான் இன்று இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக உங்கள் முன் தோன்றுகிறேன். அந்த தேர்தலில் எதிர்க்கட்சியினால் மேற்கொண்ட வன்முறைகளுக்கு மத்தியில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் கருதி மக்கள் 58 சதவீத அதிக வாக்குகளால் என்னை மீண்டும் தெரிவு செய்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி என்ற ரீதியில் இது வரை இருந்ததற்கு மேலான இடத்துக்கு எனது நாட்டை கொண்டு செல்ல எனக்கு முடிந்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதார நிலை கடந்த நான்கு வருடங்களில் மேலும் வலுவடைந்துள்ளது. வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது. அது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது. அத்துடன் மக்களின் சமூக கலாசாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் எமது நிலையில் முன்னேற்றத்தை காண முடிகிறது. இலங்கை மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசத்தையிட்டு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப் போகிறேன் என்ற எண்ணம் எனது 40 வருட கால அரசியல் வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ளது. நாட்டை ஐக்கியப்படுத்தியதையடுத்து நாட்டு மக்களின் மன வேதனையை தீர்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது எனது பூரண நம்பிக்கை. எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். நட்புறவு பல்கலைக்கழ கமானது பல்வேறு இன, வர்க்க, மற்றும் மதங்களை சேர்ந்தவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனமாகும். இந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாவான பட்ரிக் லுமும்பாவின் உன்னத நோக்கம் ஒருவரின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் அவருடன் நட்புறவை பேணுவதாகும். எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரும் பாரிய சவாலின் போதும் நான் இந்த கொள்கையையே பின்பற்றப் போகிறேன். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு உயர்ந்த மட்ட பல்கலைக்கழக கல்வியை மனித குலத்துக்கு வழங்கும் உன்னத சேவை பங்களிப்பினை மேற்கொள்ளும் நிறுவனமான நட்புறபு பல்கலைக்கழத்தின் 50 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் சந்தர்ப் பத்தில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக உள்ளது. அத்துடன் எனது இளைய சகோதரர் இந்த சிரேஷ்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்று கூறிக் கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.அத்துடன் 70 ஆம் ஆண்டுகளில் இந்த உன்னத பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்" என்று ஜனாதிபதி அங்கு கூறினார்.

 
1 views, 1 so far today |
No Comments

Leave a Reply

Sun, May 9, 2010, 2:22pm IST
இந்தோனேஷியாவில் நில நடுக்கம் : இலங்கைக்குப் பாதிப்பில்லை
இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ராவில் இன்று காலை 7.4 ரிச்டர் அளவில் புவி அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கைகு இதனால் எவ்வ... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 2:21pm IST
ஆபத்தை எதிர்நோக்கும் சிகிரியா ஓவியங்கள்
சிகிரியா ஓவியங்களைப் பழுதாக்கும் சிறிய உயிரினங்களை அழிப்பதற்கு இரசாயனக் களைகொள்ளியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்Ī... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 2:09pm IST
புதிய ஆணைக்குழு அமைக்கும் இலங்கையின் அறிவிப்பு சர்வதேச விசாரணையை திசைத்திருப்புவதற்கான முயற்சி
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் சர்வதேச மரபுகள் மீறப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் புத... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 2:04pm IST
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னாரில் பாராட்டுவிழா _
நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 2:00pm IST
மக்கள் கதறல்களுக்கு மத்தியில் கொழும்பில் சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்பட்டன
கொழும்பு 02 மலே வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புகளை இன்று பிற்பகல் கொழும்பு மாநகர சபையினருடன் பொலி&... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 10:18am SLT
பிரபாகரனின் பிறந்த இல்லம் கற்குவியலாக காட்சியளிக்கின்றது - சிவாஜிலிங்கம் கவலை.
தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாக விளங்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் பி... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 9:48am SLT
கருணாவின் அலுவலகம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நாளை முதல் இயங்கவுள்ளது.
இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் அனை... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 9:32am SLT
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க இலங்கை - இந்தியா கூட்டு முயற்சி : எஸ்.எம்.கிருஷ்ணா.
பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமா... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 9:22am SLT
முன்னாள் போராளிகளைப் பார்வையிட ஐ.நா. அதிகாரிகளுக்கு அனுமதியில்லை
முன்னாள் விடுதலை புலி போராளிகள் அரசினால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல முடியாமல் இருப்ப... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 8:59am SLT
செனட் சபை ஒன்று அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது - ராஜித்த சேனாரத்ன.
மிகவிரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 10:09am SLT
புதிய அமைச்சரவையை மே நடுப்பகுதியில் மறுசீரமைக்கும் சாத்தியம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை மே மாதத்தில் மற&... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 9:52am SLT
பிரிட்டனில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடம் கோருவோர் தொடர்பில் குற்றச்சாட்டு.
தஞ்சக் கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் மீதான விசாரணைகளின் போது அதிகாரிகளை அனுப்பத் தவறியதன் காரணமாக சட்டவிரோத குடிய... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 9:34am SLT
குவைத்தில் நடைபெறவிருந்த இலங்கை கலாசார விழா கைவிடப்பட்டது.
குவைத்தில் இலங்கை சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் கலாசார விழா அந்நாட்டவர்களினĮ... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 8:12am SLT
அமிதாப்பச்சன் வீட்டின் முன் நாம் தமிழர் முற்றுகை போராட்டம்.
நாம் தமிழர் பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்று சேர்ந்து மும்பையில் நேற்று நட&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, Apr 25, 2010, 8:16am SLT
ஒரிசா பெண் கொலை வழக்கில் வவுனியா இளைஞருக்கு ஆயுள்தண்டனை
இந்திய, ஒரிசா மாநிலத்தைச் சோ்ந்த பெண் ஒருத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, Apr 25, 2010, 8:15am SLT
மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தையில்.
தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் வெவ்வேறு கருத்துகளுடைய பிரத... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, Apr 25, 2010, 8:11am SLT
ஐஸ்வர்யா ராய் படத்தை புறக்கணிப்போம்: அமிதாப் வீட்டு முன்பு போராட்டம்: ரஜினி, கமலுக்கு நன்றி - சீமான்.
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றால் அவரது படங்களை புறக்கணிப்&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 11:04am SLT
கிளிநொச்சி ரயில் பாதை ஓரங்களில் கடைகள் அமைக்க வேண்டாமென பிரதேச சபை அறிவித்துள்ளது.
கிளிநொச்சி ரயில் பாதையின் இருமருங்கிலும் கடைகள், வியாபார ஸ்தபானங்களை அமைக்க வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ள&... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 10:59am SLT
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொன்சேகா குற்றச்சாட்டு.
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடக் கூடிய உரிமை மறுக்கப்பட்டுள்... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 10:55am SLT
உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் - சபையில் ரணில்.
அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாத... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 10:41am SLT
அரசின் நடவடிக்கை அநாகரிகமானதும் அரசியல் சாணக்கியமற்றதும் என தே.சு.மு சாடல்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் இட ஒதுக்கீடு தொடர்பில் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிய... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 10:25am SLT
யாழ் போதனா வைத்தியசாலையில் தென்னிலங்கை காதலர் தர்க்கப்பட்டு கத்திக்குத்தில் இருவரும் காயம்.
யாழ். போதனா வைத்தியசாலையில் கண் கிளினிக்கில் நேற்று கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இச் சம்பவத்தில் சம்பந்தப&... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu, Apr 22, 2010, 9:08 am SLT
புதிய சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு _
இலங்கையின் 7ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவினை பிரதமர் தி.மு. ஜயரட்... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu, Apr 22, 2010, 9:06 am SLT
பலத்த பாதுகாப்புடன் புதிய நாடாளுமன்றின் முதல் கூட்டம்! 225 எம்.பிக்கள் இன்று சத்தியப்பிரமாணம்
இலங்கையின் புதிய நாடாளுமன்றம் இன்று காலை 8.45 மணிக்கு முதல் தடவையாகக் கூடியதும் ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu, Apr 22, 2010, 9:04 am SLT
அமைச்சரவையை நியமித்த பின்னர் ஜனாதிபதி பூட்டான் விஜயம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானுக்கு &... [மேலும்...]
-----------------------------------------------------------
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution