முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை - ராஜ்யசபாவில் தகவல்
 
 
காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில் இருப்பதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஃபரூக் அப்துல்லா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அமைச்சர் அளித்த பதிலில்,

நாட்டின் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, 4,563 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திறனை தமிழகம் கொண்டுள்ளது.

ஜவகர்லால் நேரு தேசிய சூரிய எரிசக்தி திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாட்டின் சூரிய எரிசக்தி மேம்பாட்டுக்கான புதிய கொள்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எரிசக்தித் துறையில் இந்தியா வை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டமாக இது இருக்கும். மேலும், நேருவின் நவீன இந்தியா பற்றிய கனவை நனவாக்கும் விதத்தில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

எரிசக்தி சேமிப்பின் தொலைநோக்கு பார்வை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கேற்ற திட்டமாகவும், உலகளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புவி வெப்ப பிரச்னையை எதிர்கொள்ளும் முயற்சியாகவும் இத்திட்டம் அமையும் என்று ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution