முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
மழை – காதல் - ஹைக்கூ மு.குருநாதன்
 
 
அவள் முகம் பார்த்ததும்
மின்னல் வெட்டி
புகைப்படம் எடுத்தது மழை !

நீ கதவை அடைத்து விட்டதால்
ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கிறது
ஜன்னலில் சாரல் !

அவளது தாவணிக்குளிரில்
நனைந்துவிட்டு, இப்படி
நடுங்குகிறதே மழை !

கருமேகக் கூந்தல்
மின்னும் கண்கள் கொண்டு
குளிர்மழையாய் வருகிறாள் என்னவள் !

சிறு தூறல் கூட
அடைமழையாகி விடுகிறது
நீ நனைவதாய் இருந்தால் !
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution