முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
முதல் மழை மு.குருநாதன்
 
 
முதல்மழை பொழிகிறது
இரவினிடையே
குறும்பகல் உருவாக்கும்
மின்னல் கீற்றையும் நனைத்து !

இடியுடன், நீரின்
இரைச்சலைச் சேர்த்து
அடிக்கிறது பெருமழை
என் அன்னையின் தூக்கம் கலைத்து !

கூரையின் துவாரங்களைக்
கண்டவுடன் ஆர்வமாய்க்
கொந்தளித்து நுழைகின்றன
நீர்க்கோர்வைகள் !

தரையை தொட்டதும்
தண்ணீர் வாளிகள்
தம்வாய் பிளக்க
நிறைகிறது வயிறு !

மாற்றப்படும் வாளிகளின்
விளிம்புகள் வாயிலாக
துள்ளிக் குதிக்கின்றது தண்ணீர் !

களிமண் சுவரின்
மண்கரைசல்கள் கோடிட்டு
ஒவ்வொரு மனிதனின்
ஆயுட் காலத்தை உணர்த்துகின்றன !

இப்போது,
வீட்டுத்தரையின் விலாசம்
வேளாண்மைக்குத் தக்கதாகிறது !

அதில் ஓரிடம் மட்டும்
வெற்றிடம் ! அது
நெருப்பை நெஞ்சில் கொண்டு
நினைவிலாது நான் துயின்ற இடம் !

 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution