|
|
|
| |
| மழைத்துளி மு.குருநாதன் | | |  | | | நிலவுப் பெண்ணை
நினைத்து ஏங்கி
முகிலன் வடிக்கின்ற
விழிகளின் துளிகள்
ஆகாயம் என்னும்
முதலாளித்துவத்தை எதிர்த்துப்
போராடும் மஞ்சன் உதிர்க்கன்ற
வியர்வை துளிகள்
பூமித்தாயிடம்
பூ முத்தங்கள் கொடுத்திட
மேகவன் உமிழ்கின்ற
இதழ்களின் துளிகள் !
விண்மீன் படைகளுக்கு
வாட்பயிற்சி தருகையில்
வான்மேகன் சிந்துகின்ற
குருதித் துளிகள் !
பசுமைத்தாவரப் புதல்வர்களுக்கு
பாலூட்ட
மஞ்சம்மாள் பொழிகின்ற
பாலின் துளிகள்
|
|
|
|
|
|
Hosting/Design Service |
Tamil News & Entertainment Portal |
24hrs live Online Radio |
Web TV |
Starasia TV |
About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise
Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution |