|
|
|
| |
| தீராத விளையாட்டு பிள்ளை | | |  | | | பாங்கியில் பணியாற்றும் தம்பதிகள் மகன் விஷால். வேலையின்றி சுற்றுகிறார். மூன்று பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒருத்தியை மனைவியாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு. அதன்படி கோடீஸ்வரி நீது சந்திரா, ஆண்களை வெறுக்கும் தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென் மூவரையும் காதலித்து வலையில் விழ வைக்கிறார். ஒரு கட்டத்தில் விஷால் திட்டம் நீது சந்திராவுக்கு தெரிய அதிர்ச்சி. காதலை முறிக்கிறார். மற்ற இருவரில் ஒருவரை கல்யாணம் செய்து காட்டு என சவால் விடுகிறார். இரு காதலிகளையும் விஷாலுக்கு எதிராக திருப்ப நீது சந்திரா வகுக்கும் திட்டங்களும் அதை முறியடித்து காதலியை தேர்வு செய்தாரா? என்பதும் மீதி கதை...
விஷால் வித்தியாசமான வினோத கேரக்டரில் நிற்கிறார். மூவரையும் காதல் வலையில் வீழ்த்த செய்யும் தந்திரமும் அதில் யாரை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுப்பது என்று குழம்புவதும் தமாஷானவை. நீது சந்திராவுடன் மோதல் ஆரம்பமானதும் விறு விறுப்பு... தனுஸ்ரீ தத்தாவின் தாதா அண்ணன் பிரகாஷ்ராஜிடம் விஷாலை அறிமுகப்படுத்துவதும், சாரா ஜென்னை வீட்டுக்கு அனுப்பி விஷால் பெற்றோரிடம் காதலை பகிரங்கப்படுத்த செய்வதும் கிடுக்கிப்பிடி. ரகசிய காதல் அம்பலமானதும் எப்படி மீள போகிறார் என்ற தவிப்பு... கிளைமாக்சில் சாரா ஜென் காதல் ஜெயிக்கிறது. நாய்க்குட்டி பிரிவால் வாடும் அவரது துயர் காதலின் வலிமைக்கு முடிச்சு போடுகிறது.
இரு காதலிகளை கழற்றி விடும் விஷாலின் காரணங்களில் ஜீவன் இல்லை. விஷாலின் துரோகத்தில் நீது சந்திரா கோபமாவது இயற்கையானது. அதையே காரணமாய் வைத்து அவரை வெட்டி விடுவதும் தனுஸ்ரீயை முகூர்த்தம் வரை கொண்டு போய் உதறுவதும் அழுத்தம் இல்லாதவை. விஷாலை தங்கை கணவர் என்று பெரும் கூட்டத்தை கூட்டி அறிமுகப்படுத்தும் பிரகாஷ்ராஜ் சிறிது நேரம் வந்தாலும் கைத்தட்டல்...
சந்தானம் கோஷ்டியின் காமெடி வழக்கமான நையாண்டி. நீது சந்திரா கவர்ச்சி வில்லத்தனத்தில் முதலிடம் காட்டுகிறார். ஆண்களை வெறுக்கும் தனுஸ்ரீயிடம் பெண்களை வெறுப்பவராக நடித்து வீழ்த்தும் சீன்கள். சுவாரஸ்யம். யுவன் சங்கர்ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம்.கலகலப்பாய் காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் திரு. திரைக்கதையை இன்னும் அழுத்தமாய் செதுக்கி இருக்கலாம்.
|
|
|
|
|
|
Hosting/Design Service |
Tamil News & Entertainment Portal |
24hrs live Online Radio |
Web TV |
Starasia TV |
About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise
Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution |