முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
தமிழ் சோறுபோடாது – மு.குருநாதன்
 
 
இலக்கணத்தை நான்
விளக்கிக் கொண்டதால்
எனக்குத் தமிழ்
பணக் கணத்தை தரவில்லை!

இலக்கியத்தை இனிதென
வாசிப்பு நல்கியதால்
எனக்குத் தமிழ்
இலட்சங்கள் தரவில்லை!

இளங்கலையும் முதுகலையும்
பட்டங்கள் தந்ததே தவிர
பணியேதும் தந்ததில்லை!

அடுத்த மொழிகளைப்
படிப்பவன் செழிக்கிறான்
பிடித்த மொழியாய்த் தமிழை
குடிப்பவன் விழிக்கிறான்

இனிஇந்தத் தமிழ்
யார்க்கும்
சோறு போடாது
உயிருக்கு அமுதூட்டும்!

 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution