| |
| அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு | | |  | | | | அத்தியாவசியப் பொருட்கள் விலை நாடெங்கும் அதிகரித்தப்படி உள்ளது. விலைவாசி குறைந்துவிடும் என்று மத்திய அரசு பல தடவை சொல்லிவிட்ட போதிலும்,அதற்கான அறிகுறிகளே காணப்படவில்லை. பிப்ரவரி மாதம் 20-ந் தேதியுடன் முடிந்த வாரத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 17;.07 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய வாரம் உணவு பணவீக்கம் 17.58 சதவீதமாக இருந்தது. அந்த வாரத்தில் பருப்பு வகைகள் 35.23 சதவீதம் உயர்தன. உருளைக்கிழங்கு 28 சதவீதம், காய்கறிகள் 15.45 சதவீதம், பால் 15.28 சதவீதம், கோதுமை 14 சதவீதம், வெங்காயம் 11 சதவீதம், பழவகைகள் 10 சதவீதம் உயர்ந்தன. அரிசி விலை நாடெங்கும் 10 சதவீதம் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக மற்ற பொருட்களின் விலை மேலும் அதிகரித்தப்படி உள்ளது. இதுவரை இருந்ததை விட தற்போதைய விலைவாசி கடுமையாக உள்ளது. ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களும் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது என்பது இனி வரும் வாரங்களில் தெரிய வரும் |
|
|
|
|