முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
விண்ணைத்தாண்டி வருவாயா
 
 
என்ஜினீயரிங் முடித்து சினிமா இயக்குனராக முயற்சி செய்கிறார் இந்துவான சிம்பு. அவர் கண்ணில் கிறிஸ்தவரான திரிஷா பட காதல். சுற்றி வந்து நட்பு வளர்த்து காதலை வெளிப்படுத்துகிறார். திரிஷாவோ வேறு மதத்தவரை பெற்றோர் ஏற்கமாட்டார்கள் என மறுக்கிறார். ஒரு கட்டத்தில் சிம்புவின் நடத்தைகள் பிடித்து போக திரிஷாவும் விரும்புகிறார். காதல் விஷயம் பெற்றோருக்கு தெரிய கொந்தளிப்பு. வேறுமாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்துகின்றனர். பாதிரியார் முன்னிலையில் விருப்பம் இல்லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்துகிறார்.

வீட்டுக்கு தெரியாமல் மீண்டும் சிம்பு-திரிஷா காதல் வளர்கிறது. சினிமா துணை இயக்குனராகி படப்பிடிப்புக்காக சில நாட்கள் கோவா போகிறார். அப்போது திரிஷாவை திருமணத்துக்கு மீண்டும் பெற்றோர் நிர்ப்பந்திக்கின்றனர். ஊருக்கு திரும்பும் சிம்புவை திரிஷா வெறுத்து ஒதுக்கி விட்டு மாயமாகிறார். அவர் என்ன ஆனார். இருவரும் சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்...

வழக்கமான ஸ்டைலில் இருந்து வித்தியாச பரிணாமம் காட்டுகிறார் சிம்பு. போட்டு தாக்கும் காதலுக்குள் சிக்கி சிலிர்க்கிறார். திரிஷாவை காதல் வலையில் வீழ்த்துவது, கேரளாவில் காதலியை தேடி முகாமிடுவது ரசனையானவை. பிற்பகுதியில் காதல் சோகத்தில் அழுத்தம் பதிக்கிறார். திரிஷா சாதாரண சேலை கெட்டப்பில் ஜில்லென சாரல் வீசுகிறார். சிம்புவை ஒதுக்குவதிலும் வசியமாவதிலும் சீரான உணர்வுகளை வெளியிடுகிறார்.

வேலையை போட்டு விட்டு காதலியை தேடிவரும் சிம்புவை திரிஷா கை கழுவுவதில் வலுவான காரணம் இல்லை. அமெரிக்காவில் சிம்பு, திரிஷா சந்திப்பு, இருவருக்கும் திருமணம் என கடைசி சீன்களை நகர்த்தி அது படம் தான் என வேறு கேரக்டர்களை இணைப்பது எதிர்பாராதது. காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இன்னும் ஜீவன் ஏற்றி இருக்கலாம்.

திரிஷா அண்ணனுடன் சிம்பு மோதுவது... கேரளாவில் திரிஷாவின் "கிளாஸ்மேட்" என அவரது உறவினர்களிடம் அறிமுகமாகி விருந்து சாப்பிடுவது கலகலப்பானவை. சிம்பு நண்பராக வரும் கணேஷ் காமெடி கலக்கல். பாபு ஆண்டனி, சத்யா ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்களும் அது படமாக்கப்பட்ட விதமும் தித்திப்பானவை. மன்னிப்பாயா, ஹோசனா பாடல்கள் மனதில் பாய்கின்றன. கவித்துவமான காதலை ஹைடெக் தரத்தில் செதுக்கியுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு அழகை அள்ளி தெளிக்கிறது

 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution